தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தும் கோரிக்கை நிராகரிப்பு: மோடி அரசுக்கு எதிராக டெல்டா விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு; ஒன்றிய குழு அனுப்பி நாடகம் போட்டு வயிற்றில் அடித்ததாக குற்றச்சாட்டு

தஞ்சாவூர்: தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் நனைந்து சாய்ந்தது. அதோடு குறுவை அறுவடை பெரும்பாலும் முடிவடைந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதற்காக விவசாயிகள் காத்திருந்த நிலையில் தொடர் மழைபெய்ததால் அறுவடை செய்யப்பட்ட நெல் நனைந்து போனது. இதனால் விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை உயர்த்தி, நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

இதையடுத்து நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதன்படி ஒன்றிய அரசின் 3 குழுக்கள், கடந்த மாதம் 26, 27ம் தேதிகளில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு நெல் மணிகளின் மாதிரிகளை சேகரித்து சென்றனர். நெல் ஈரப்பதம் குறித்து ஒன்றிய அரசுக்கு, நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் என்றும், அதன் பிறகு ஒன்றிய அரசு நெல் ஈரப்பதம் குறித்து அறிவிப்பு வௌியிடும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் என்ன காரணத்தாலோ நெல் ஈரப்பத தளர்வு கோரிக்கையை ஒன்றிய அரசு திடீரென நிராகரித்து விட்டது. இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமல்நாதன்: தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் செய்யப்படும் காலங்களில் இயற்கையான மழைப்பொழிவு, ஈரக்காற்றின் காரணமாக நெல் மணிகளில் ஈரப்பதம் இருப்பது தவிர்க்க முடியாதது. இதை ஒன்றிய அரசு உணர்ந்த காரணத்தால் தான் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நெல் கொள்முதலின் போது 22 சதவீத ஈரப்பத நெல்லையும் கொள்முதல் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

ஆனால் இந்தாண்டு ஈரப்பத தளர்வு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. டெல்டா விவசாயிகளின் வயிற்றில் மோடி அரசு அடித்துள்ளது. ஒன்றிய அரசின் அறிவிப்பு உள்நோக்கம் கொண்டது. தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் எதிர்பார்ப்பையும் ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நிராகரித்திருப்பதாக கருதுகிறோம். எனவே, தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து கட்சிகளின் எம்பிக்கள் ஒன்றிணைந்து தமிழ்நாட்டு உழவர்களின் உரிமைகளை நிலை நாட்டிட வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் குரல் கொடுக்க வேண்டும். ஈரப்பத தளர்வு மறுப்புக்கான காரணத்தை ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தில் குதிப்போம்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் சாமி.நடராஜன்: நெல் ஈரப்பத தளர்வு கோரிக்கையை நிராகரித்த ஒன்றிய அரசை வண்மையாக கண்டிக்கிறோம். கோவையில் நடந்த இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி, தமிழக விவசாயிகள் பற்றி பெருமையாக பேசி சென்ற மறுநாளே இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகி இருப்பது தமிழக விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு செய்யும் துரோகமாகும். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் மாசிலாமணி: பெயரளவில் டெல்டா மாவட்டங்களில் ஒன்றிய குழுவினர் ஆய்வு செய்தனர். ஒரு மாதம் கழித்து 22 சதவீத ஈரப்பதத்துக்கு அனுமதி கிடையாது என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

பருவமழை காரணமாக குறுவை நெல் பாதிக்கப்பட்டதுடன், இளம் சம்பா பயிர்களும் பாதிக்கப்பட்டதற்கு உரிய இழப்பீட்டுத்தொகையை ஒன்றிய அரசு வழங்காத நிலையில் குறைந்தபட்சம் ஈரப்பத அளவை கூட அதிகரித்து கொள்முதல் செய்வதற்கு அனுமதி வழங்கவில்லை. கோவையில் விவசாயிகளின் பாதுகாவலர் என்று பிரதமர் மோடி பேசினார். இது முற்றிலும் ஏமாற்று வேலை. தெற்கு ராஜன் வாய்க்கால் பாசன சங்க நிறுவனர் செந்தில்குமார்: இயற்கை சீற்றத்தால் நெற்பயிர் ஈரப்பதத்திற்கு உள்ளாகிறது. விவசாயிகள் கஷ்டப்பட்டு, நகைகளை அடகு வைத்தும், வங்கிகள், தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கியும் சாகுபடி செய்கின்றனர்.

கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்த ஒன்றிய குழுவினர், நெல்மணிகளை ஆய்வுக்கு எடுத்து சென்றதுடன் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றனர். தற்போது நிராகரித்திருப்பது ஒன்றிய குழுவின் நாடகத்தை காட்டுகிறது. விவசாயிகள் மீது பிரதமருக்கு அக்கறை இருந்தால் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். கோவையில் நடந்த இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி, தமிழக விவசாயிகள் பற்றி பெருமையாக பேசி சென்ற மறுநாளே நெல் ஈரப்பதம் 22 சதவீதமாக உயர்த்தும் கோரிக்கை நிராகரிப்பு என்ற அறிவிப்பு வெளியாகி இருப்பது தமிழக விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு செய்யும் துரோகமாகும்.

Advertisement

Related News