நெல் கொள்முதலில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர்: அமைச்சர் குற்றச்சாட்டு
சென்னை: நெல் கொள்முதலில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நெல் கொள்முதலில் எதிர்க்கட்சிகள் தற்போது அரசியல் செய்கின்றன. திமுக அரசை தூற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. தினந்தோறும் தன்னை பற்றி செய்தி வர வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த மத்திய அரசு மறுத்திருக்கிறது. நெல் ஈரப்பத அளவை உயர்த்த மறுத்துவிட்டு வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றிருக்கிறார். ஆக்கப்பூர்வமான வேலையை செய்யாமல் தூற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.