நெல் கொள்முதல் குறித்து எடப்பாடி பழனிசாமி தவறான தகவல்களை கூறி வருகிறார்: அமைச்சர் சக்கரபாணி
சென்னை: நெல் கொள்முதல் குறித்து எடப்பாடி பழனிசாமி தவறான தகவல்களை கூறி வருகிறார் என அமைச்சர் சக்கரபாணி குற்றச்சாட்டு வைத்துள்ளார். திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த வருடம் 3 மடங்கு அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற கூட்டத்தில் ஆகஸ்ட் 18ஆம் தேதியே செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி பெறப்பட்டதாக கூறினார். அவர்களிடம் ஒன்றிய அரசு கொடுத்த கடிதத்தை கேட்டோம். தற்போது வரை அதற்கான பதில் வரவில்லை. ஒன்றிய பாஜக உடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக இதற்கான அனுமதியை பெற்று தரலாம். ஆனால் இதுவரை பெற்று தரவில்லை. மேலும் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதல் செய்ய ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 10 ஆண்டுகள் கொள்முதல் செய்ததை விட 54 மாதங்கள் திமுக கொள்முதல் செய்தது அதிகம் என தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தவறான தகவல்களை கூறி முதல்வர் குறித்து அவதூறு பரப்புகிறார். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் 183 இடங்களில் 2 எடை மிஷின் மூலம் நெல் கொள்முதல் நடைபெறுகிறது.எதிர்க்கட்சித் தலைவர் குறைகளை சுட்டிக் காட்டலாம் ஆனால் தவறான தகவல்களை தெரிவிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அதிகப்படியான நெல் விளைச்சல் நடந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி ஆட்சி காலத்தை விட தற்போது அதிகப்படியான விலை கொடுத்து வருகிறோம்.
திமுக ஆட்சியில் 2021-25ல் தற்போது வரை 1.96 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
