தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நேர்த்தியான மகசூல் தரும் புதிய நெல் ரகங்கள்!

என்னதான் விவசாயத்தில் பல புதுமைகள் வந்தாலும் நெல் சாகுபடியை விட்டு விடாமல் செய்து வரும் விவசாயிகள்தான் தமிழகத்தில் அதிகம். அதிலும் சில விவசாயிகள் சில பயனுள்ள தொழில்நுட்பங்களைக் கையாண்டு நெல் சாகுபடியிலும் நேர்த்தியான லாபத்தை அள்ளுகிறார்கள். இத்தகைய நெல் விவசாயிகளுக்காக ஆண்டுதோறும் நல்ல விளைச்சல் தரும் நெல் ரகங்கள் வெளியிடப்படுகிறது. அதன்படி சமீபத்தில் வெளியிடப்பட்ட சில நெல் ரகங்கள் குறித்து கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரத்திலும் சில நெல் ரகங்கள், அவற்றின் சிறப்புகள் குறித்து அறிவோம். மத்திய கால ரகங்கள் 130-145 நாட்கள் வயதுடையவை. சம்பா, பின் சம்பா, தாளடி மற்றும் பிசானம் பருவங்களில் பயிரிட ஏற்றவை. இதில் கோ 52 சராசரி விளைச்சல் எக்டருக்கு 6191 கிலோ கொடுக்கவல்லது. அதிகபட்ச விளைச்சல் (தெற்குக் கடையம், திருநெல்வேலி மாவட்டம்) எக்டருக்கு 10416 கிலோ ஆகும். புகையான் மற்றும் தத்துப்பூச்சிக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. சமைத்த பின் அரிசி நீளும் தன்மையும் கொண்டது. அமைலோஸ் என்ற மாவுப் பொருள் இடைப்பட்ட அளவில் இருப்பதால் சிறந்த சமையல் பண்புகளைக் கொண்டுள்ளது.

Advertisement

கோ 56 ரகம் சாயாத தன்மை மற்றும் நடுத்தர உயரம் கொண்ட அதிக விளைச்சல் தரவல்லது. எக்டருக்கு சராசரி 6372 கிலோ விளைச்சல் கொடுக்கவல்லது. அதிகபட்ச விளைச்சல் எக்டருக்கு 9990 கிலோ (கம்பம், தேனி மாவட்டம்) தர வல்லது. தண்டு மற்றும் துளைப்பான், ஆனைக்கொம்பன் பூச்சித் தாக்குதலுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது. வெள்ளை நிற மத்திய சன்ன அரிசியை உடைய இந்த ரகம் நல்ல அைரவைத்திறனும், முழு அரிசி காணும் திறனும் கொண்டது. சாதமானது நீளும் தன்மை கொண்டிருப்பதால் (1.61) சமைப்பதற்குச் சிறந்தது. மேலும், சாதம் அதிகம் உபரியாகும் தன்மையும் பெற்றுள்ளது.கோ 57 எக்டருக்கு 4638 கிலோ தரவல்லது. கவுனியை விட 55.74 சதவிகிதம் அதிக விளைச்சல் தரவல்லது. மாவுச்சத்தின் விகிதம் பிரபல வெள்ளை அரிசி ரகங்களான வெள்ளைப் பொன்னி, ஐஆர் 64 ரகங்களை விட மேம்படுத்தப்பட்ட கவுனி அதிக நார்ச்சத்து கொண்டது. கருஊதா நிற அரிசியை கொண்ட இந்த ரகம், இட்லி, தோசை, அவல்மற்றும் சிற்றுண்டி வகைகள் தயாரிப்பிற்கு ஏற்றது.

கோ 59 ரகம் எக்டருக்கு சராசரி 5867 கிலோ விளைச்சல் தர வல்லது. அதிக விளைச்சல் 8,676 கிலோ எக்டர் (பந்த்நகர், உத்ரகாண்ட்) 8,200 கிலோ எக்டர் (தருமபுரி). நடுத்தர குட்டை மற்றும் வறட்சியை தாங்கும் பண்புகளை உடையது. அதிக அரைவைத் திறன், முழு அரிசி காணும் திறன் மற்றும் சிறந்த சமையல் பண்புகளைக் கொண்டது.ஆடுதுறை 54 ரகம் அதிகபட்ச விளைச்சலாக எக்டருக்கு 8654 கிலோ (கோவை மாவட்டம்) அளிக்கும். இலைமடக்குப் புழுவிற்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. வெள்ளை மத்திய சன்ன அரிசியை உடைய இந்த ரகம், அதிக அைரவை மற்றும் முழு அரிசி காணும் திறனும் கொண்டது. வெள்ளைப் பொன்னிக்கு இணையான சிறந்த சமையல் பண்புகளைக் கொண்டது. ஆடுதுறை 60 ரகத்தின் சராசரி விளைச்சல் எக்டருக்கு 6028 கிலோவாகும். முழுமையாக வெளிவந்த கதிர்கள், அதிகப்படியான வளர்ந்த நாற்றுகள், சீரான பூக்கும் தன்மை, சீரான முதிர்ச்சி, மணிகள் உதிராத தன்மை கொண்டது. பூச்சி நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. ஆயிரம் மணிகளின் நெல் எடை 18.5 கிராம். இது ஏடிடீ 46 ரகத்தை விட 13.2 சதவிகிதம் அதிகமாகும். அதிக அைரவைத் திறன் கொண்டது.நீண்டகால (145-160 நாட்கள்) வயதுடைய ரகங்கள் ஒரு போக சம்பாவாகிய ஆடி மாதம் விதைப்பதற்கு ஏற்றவைகளாகும்.

ஆடுதுறை 51 ரகம் குறைந்த உரச்செலவில் துரிதமாக வளரும் தன்மை உடையது. எக்டருக்கு சராசரி விளைச்சல் 6595 கிலோவும், அதிகபட்ச விளைச்சல் 10035 கிலோவும் (திருவிசைநல்லூர், தஞ்சாவூர் மாவட்டம்) தரவல்லது. குலைநோய், இலைச்சுருட்டுப்புழு மற்றும் குருத்துப்பூச்சிக்கு எதிர்ப்புத் திறனும், புகையான், இலையுறை அழுகல் மற்றும் இலையுறைக் கருகல் ஆகியவற்றிற்கு மிதமான எதிர்ப்புத் திறனும் கொண்டது. மத்திய சன்ன அரிசியாக இருந்த போதிலும், ஆயிரம் நெல்மணிகளின் எடை 23.9 கிராம் ஆகும். இது சி.ஆர் 1009-க்கு இணையானதாகும்.அைரவைத்திறன் மற்றும் முழு அரிசி காணும் திறன் முறையே 70.3 சதவிகிதம் மற்றும் 60.5 சதவிகிதமாகும். சமையல் பண்புகள் மற்றும் சமைத்த உணவின் சுவை சீ.ஆர். 1009-க்கு இணையாக உள்ளது. மேலும், சமைத்த அரிசி ஒட்டாமலும், மிருதுவாகவும் இருக்கும். சிற்றுண்டி வகைகள் மற்றும் இனிப்பு கார வகைகள் செய்யவும் ஏற்றது. ஆடுதுறை 52 ரகம் நடுத்தர உயரம், நடுத்தரத் தூர்க்கட்டும் திறன் மற்றும் சாயாத தன்மை கொண்டது. எக்டருக்கு சராசரி 6002 கிலோ விளைச்சல் தரவல்லது. அனைத்திந்திய ஆய்வுகளின்படி மத்திய மண்டலத்தில் பி.பீ.டியை விட 27.6 சதவிகிதம் அதிக விளைச்சல் தரவல்லது என கண்டறியப்பட்டது. மத்திய சன்ன வெள்ளை அரிசி, 1000 நெல் மணிகளின் எடை 16.9 கிராம் ஆகும். சிறந்த சமையல் பண்புகளைக் கொண்டது. இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு வேளாண் பல்கலையின் நெல் துறையை 94433-76334 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துக்கொள்ளலாம்.

 

Advertisement

Related News