பேக்கேஜிங் - ஒரு டிசைன் மட்டுமல்ல; ஒரு பொருளை நுகர்வோரை வாங்க வைப்பதே பேக்கேஜிங்தான்! - பிராண்டிங் நிபுணர் அஸ்வின்
உலகத்தரத்தில் நமது பிராண்டிங் பேக்கேஜை உருவாக்கி, துரிதமாக நம் தயாரிப்பு மற்றும் மதிப்புக் கூட்டுப்பொருள்களை சந்தைப்படுத்த முடியும் என வழிகாட்டுகிறார் மதுரை ஷேப்பர்ஸ் பேக்கேஜிங் டிசைன் ஸ்டுடியோஷ் நிறுவனர் அஸ்வின்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " பேக்கேஜிங் என்பது டிசைன் மட்டுமல்ல. ஒரு பொருளை நுகர்வோரை வாங்க வைப்பதே பேக்கேஜிங்தான். 1500 பொருள்களுக்கு மேல் நாங்க பேக்கேஜிங் செய்து கொடுத்துள்ளோம். வியாபார உத்திகளைக் கடந்து ஒரு உணர்வுப் பிணைப்பில் தான் அதிகப்படியானோர் பொருள்களை வாங்குகின்றனர்.
அதைத் தான் நாங்கள் ஸ்டேடர்ஜி பேக்கேஜிங், எமோஷனல் பேக்கேஜிங், ஸ்டோரி பேக்கேஜிங் என வகைப்படுத்தி வடிவமைக்கிறோம்.
உதாரணமாக பஜ்ஜி மாவு பாக்கெட்டில், தேனீர்க்கடைக்காரர் படத்தை வடிவமைக்கிறோம். இதனால்,பலகாரக் கடைக்காரர்களால் இந்த மாவு எளிதாக அடையாளம் காணப்படுகிறது. அதேபோல், ஒரு பொருள் விற்கப்படும் பகுதியைக் குறிப்பிடும் படங்களையும் தேர்ந்தெடுத்து பாக்கெட்டில் பொறிக்கிறோம். இது தான் டார்கெட் நுகர்வோர்களை கருத்தில் கொண்டு பேக்கேஜிங் செய்யும் நுணுக்கம்.
அதேபோல், ஒரு மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிக்கும் போது, பேக்கேஜில் மூலப்பொருளின் படம் பொறித்து சந்தைப்படுத்துகிறோம். உதாரணமாக வாழைப்பூ மூலமாக தயாரிக்கப்படும் உணவுப் பொருளின் பாக்கெட்டில் வாழைப்பூவின் படத்தை அச்சிடுகிறோம். அதேபோல், அந்த பாக்கெட்டை செவ்வாழை நிறத்திலேயே உருவாக்குகிறோம். இது, பொருள்களை எளிதாக நுகர்வோர்களிடம் கொண்டு சேர்க்கும்.
மேலும், வீட்டுமுறையில் தயாரிக்கப்படும் திண்பண்டங்களின் பாக்கெட்டுகளில், உணர்வுரீதியான ஒரு தொடர்பு ஏற்படுத்தும் வகையில் குடும்பத்தினர் சேர்ந்து திண்பண்டங்கள் தயாரிப்பது போன்ற ஓவியங்களை பயன்படுத்துகிறோம். இவ்வாறாக, உலகத்தரத்தில் உங்கள் பிராண்டிங் பேக்கேஜை உருவாக்க சிறந்த யோசனைகளை, வழிமுறைகளை வழங்கிட காத்திருக்கிறோம்.
முழு விவரங்கள், ஆலோசனைகளுக்கு வருகின்ற 17.08.2025 சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் "அக்ரி ஸ்டார்ட்அப் திருவிழா 2.0" கலந்து கொள்ளுங்கள். முன்பதிவுக்கு 83000- 93777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.