ப.சிதம்பரம் பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து
சென்னை: ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்த நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: தெளிவு, நிதானம், எடுத்துக்கொண்ட துறைகளில் ஆழங்காற்பட்ட அறிவு, நீண்ட அனுபவம் ஆகியவை ஒருங்கே அமையப் பெற்ற அருமை நண்பர், ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் இந்தியாவின் உயர்வுக்கும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என விழைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ப.சிதம்பரத்தை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
Advertisement
Advertisement