சொந்த பயன்பாட்டு வாகனங்களை விதிகளை மீறி வாடகைக்கு இயக்கினால் அபராதம்: போக்குவரத்துத்துறை எச்சரிக்கை
சென்னை: சொந்த பயன்பாட்டு வாகனங்களை விதிகளை மீறி வாடகைக்கு இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விதிகளை மீறி வாகனங்களை இயக்கும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்ல வணிக உரிமம் இல்லாத வாகனங்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. விதிகளை மீறி வெள்ளை நிற பதிவெண் கொண்ட வாகனங்கள் வாடகைக்கு விடுவது சட்டத்துக்கு புறம்பானது. வெள்ளை நிற பதிவெண் கொண்ட வாகனங்களில் பயணிகளை கட்டண அடிப்படையில் ஏற்றிச் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement