வெளிமாநில பதிவெண் கொண்ட 547 பேருந்துகள் இன்று முதல் இயங்காது: ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு
ஏற்கனவே, வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளாக மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே கேட்டிருந்தது. 6 மாதகாலத்திற்கு முன்பாகவே தமிழக போக்குவரத்துதுறை ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு கால அவகாசம் வழங்கி இருந்தது. எனினும் இதுவரை சுமார் 547பேருந்துகளை தமிழக பதிவெண்ணுக்கு மாற்றாமல் வெளிமாநில பதிவெண் கொண்ட பேரூந்துகளாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆம்னி பேருந்துகளை இன்று முதல் இயக்குவதற்கு தமிழகத்தில் போக்குவரத்து துறை முழுமையான தடை விதித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 547 வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளின் நிலை தற்போது கேள்வி குறியாகியுள்ளது. குறிப்பாக ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தினர் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தில் அடுத்தகட்ட ஆலோசனை கூட்டம் மேற்கொள்ள உள்ளனர். அந்த ஆலோசனைக்கு பிறகு முடிவுகளை விரைவாக தெரிவிப்பதாகவும், அதன் பிறகு தமிழக அரசின் நடவடிக்கை எதிர்த்து தமிழக அரசிடம் கோரிக்கை முன்வைக்க இருப்பதாகவும். மேலும் மூன்று மாத காலத்திற்கு தங்களுக்கு காலநீட்டிப்பை தமிழக அரசு வழங்கினால் அதற்குள்ளாக தங்களின் பதிவெண்ணை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.