பிற மொழிகளில் அண்ணாவின் நூல்களை வெளியிட நடவடிக்கை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்
சென்னை: பேரவையில் கேள்வி நேரத்தின்போது ஆயிரம் விளக்கு எம்எல்ஏ எழிலன் (திமுக) பேசுகையில்,‘அண்ணாவின் எழுத்துகள் பிறமொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும்,’என்றார். இதற்கு பதில் அளித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில்,‘முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார். அதேபோல, பெரியாருடைய கருத்துகளையெல்லாம் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதையும் இங்கே குறிப்பிட்டிருக்கிறார்கள். அதேபோல, அம்பேத்கரின் நூல்களையெல்லாம் கூட தமிழில் மொழிபெயர்க்கக்கூடிய நடவடிக்கைக்கும் முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார். அதற்கும் துறையின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், உறுப்பினரின் கருத்துகள் எதுவாக இருந்தாலும் நிச்சயமாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று, துறையின் சார்பிலே நடவடிக்கை எடுக்கப்படும்,’என்றார்.
Advertisement
Advertisement