இயற்கை விவசாயம் எனது இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது: பிரதமர் மோடி பேச்சு
கோவை: இயற்கை விவசாயம் எனது இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது என கோவையில் நடைபெற்று வரும் இயற்கை வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும் 'தமிழ்நாட்டின் சக்தி பீடமாக கோவை விளங்குகிறது. கோவை எம்.பி.யாக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது குடியரசு துணைத் தலைவராக இருந்து நமக்கு வழிகாட்டுகிறார். மருதமலை முருகனை முதன்மையாக தலை வணங்குகிறேன். இயற்கை விவசாயம் எனது இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது. பல விவசாயிகளுடன் கலந்தாலோசிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. சிறு வயதிலேயே தமிழை கற்று இருக்கலாம் என்று தோன்றுகிறது' என பிரதமர் பேசினார்.
Advertisement
Advertisement