வைகை அணையில் இருந்து நீர் திறக்க ஆணை
சென்னை: வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு 120 நாட்களுக்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முல்லை பெரியாறு ஒருபோக பாசன பகுதிகளுக்கு நாளை முதல் 120 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 1,130 கன அடி வீதம் மொத்தம் 120 நாட்களுக்கு 8,493 மி.க. அடி தண்ணீரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீர் திறப்பால் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.
Advertisement
Advertisement