தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி சந்திப்பு அதிமுக மாஜி அமைச்சர்கள் நயினாருடன் ஆலோசனை

நெல்லை: பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் சந்தித்து பேசிய நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் நேற்று நெல்லை மாவட்ட பாஜ அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து அரைமணி நேரம் ஆலோசனை நடத்தினர். பின்னர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ஆகியோர் ஒன்று சேர்ந்து இருக்கின்றனர். பசும்பொன்னில் அவர்கள் சந்தித்து பேசியிருப்பதால் பலம் யாருக்கு, பலவீனம் யாருக்கு என்பது அவர்கள் வெளியே என்ன கூறுகிறார்கள் என்பதை பொருத்துதான் அமையும். அதைப்பற்றி நான் இப்பொழுது கருத்துக்கள் தெரிவிக்க முடியாது. அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.தவெகவுடன் கூட்டணி குறித்து இப்போது கூறமுடியாது. தேர்தல் காலங்களில் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர எதிரிகளும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

* மூவர் சந்திப்பு ஒருநாள் பரபரப்பு: உதயகுமார்

ஆலோசனைக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறுகையில், ``திருமண விழா குறித்து அழைப்பு விடுக்கவே பாஜ மாநில தலைவரை நேரடியாக சந்தித்தோம். செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகிய மூன்று பேர் சந்திப்பு எவ்வித பின்னடைவையும் ஏற்படுத்தாது. இதுகுறித்து எங்களுடைய பொதுச்செயலாளர் கருத்தை தெளிவாக கூறிவிட்டார். அது ஒரு நாள் பரபரப்பு. நீங்கள் அதை மிகையாக பேசி பரபரப்பாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இது புதிது இல்லை’’ என்றார்.

Advertisement