ஓபிஎஸ் குறித்த கேள்வி: எடப்பாடி ‘கப்சிப்’
கோவை: அதிமுக பொது செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று மதியம் சேலத்திலிருந்து கார் மூலமாக ேகாவை விமான நிலையம் வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அப்போது, சென்னையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கேட்ட போது எந்த பதிலும் கூறவில்லை. தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் அவசர அவசரமாக விமான நிலையத்திற்குள் சென்று விட்டார்.
Advertisement
Advertisement