தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

5%, 18% என்ற அளவில் ஜிஎஸ்டி வரி குறைப்பால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பா?

புதுடெல்லி: 5%, 18% என்ற அளவில் ஜிஎஸ்டி வரி குறைப்பால் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், ஜிஎஸ்டியில் சீர்த்திருங்கள் கொண்டு வரப்பட உள்ளது. தீபாவளி பரிசாக இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறினார். அதன்படி டெல்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஜிஎஸ்டி வரியை எளிமைப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் நிருபர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், ‘இனி இரண்டடுக்கு ஜிஎஸ்டி வரி மட்டுமே நடைமுறையில் இருக்கும்’ என தெரிவித்துள்ளார். அதாவது ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது 5, 12, 18 மற்றும் 28 என 4 அடுக்குகளாக இருந்தது.

Advertisement

இனி 5 மற்றும் 18 என இரண்டு அடுக்காக மட்டுமே இருக்கும் என்றும் இந்த அறிவிப்பு வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்தார். இந்த வரி குறைப்பால் என்னென்ன பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது பற்றிய விவரம் வருமாறு: முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்: உயிர்காக்கும் மருந்துகளுக்கு 12 சதவீதமாக இருந்த வரி பூஜ்யமாக குறைகிறது. பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டது. மாணவர்களுக்கு தேவையான எழுது பொருள்கள், வரைபடங்கள், நோட்டுகள், ரப்பர், பென்சில், கிரையான்ஸ் உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி முழுவதும் நீக்கப்பட்டது. தனிநபர் ஆரோக்கியம் மற்றும் வாழ்நாள் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

வரி குறைக்கப்பட்ட பொருட்கள்: வீட்டு உபயோக பொருட்கள், சாமானிய மக்களுக்கான பொருட்கள் அனைத்தும் 5 சதவீத வரி அடுக்குக்குள் கொண்டு வரப்படுள்ளது. ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை மற்றும் பல் ஃப்ளாஸ் போன்ற தனிப்பட்ட பராமரிப்பு பொருட்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பால் புட்டி, நாப்கின், மருத்துவ டயப்பர்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வெண்ணெய், நெய், பால் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் நொறுக்குதீனிகளுக்கான வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தையல் இயந்திரம் மற்றும் அதற்கான உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசி, டிவி மற்றும் கார் உள்ளிட்டவற்றிற்கு வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையில், தெர்மோமீட்டர், மருத்துவ ஆக்ஸிஜன், பரிசோதனை பொருள்கள், கண்ணாடி மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

வரி உயர்த்தப்பட்ட பொருட்கள்: சிகரெட், பான்மசாலா, கார்பனேற்ற குளிர்பானங்களுக்கு 28 சதவீதமாக இருந்த வரி, 40% ஆக உயர்த்தப்பட்டு சிறப்பு வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை பிரதமர் மோடி வரவேற்றிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சுதந்திர தின உரையின் போது, அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கான எங்கள் நோக்கம் குறித்து நான் பேசியிருந்தேன். சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதையும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்ட பரந்த அளவிலான ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கான விரிவான திட்டத்தை ஒன்றிய அரசு தயாரித்திருந்தது. ஒன்றிய அரசு மற்றும் மாநிலங்களை உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சில் சாமானியர்கள், விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜிஎஸ்டி விகித குறைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து ஒன்றிய அரசு சமர்ப்பித்த திட்டங்களுக்கு கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

புதிய அறிவிப்பின்படி, 12 சதவிகிதத்தில் இருந்த பொருட்கள் 5 சதவிகிதத்திற்கும், 28 சதவிகிதத்திலிருந்த பொருட்கள் 18 சதவிகிதத்திற்கும் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதனால். சாமானிய மக்கள் பெரிய அளவில் பலன் பெறுவார்கள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த புதிய மாற்றத்தின்படி கல்வி பொருட்களுக்கான ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, காப்பீடுக்கான ஜிஎஸ்டியும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

ரூ.2 லட்சம் கோடி இழப்பா? ஜிஎஸ்டி முறையில் மிகப்பெரிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. இமாசலப்பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்களும், புதிய ஜிஎஸ்டி சீரமைப்பால் ரூ.1.5 லட்சம் கோடி முதல் ரூ.2 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளன. ஆனால் எஸ்பிஐ ரிசர்ச் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலங்களுக்கு 2025-26 நிதியாண்டில் மட்டும் ஜிஎஸ்டியில் இருந்து ரூ.10 லட்சம் கோடி வரை வருவாய் கிடைக்கும் என்றும், கூடுதலாக ஒன்றிய அரசின் வரிவருவாய் பகிர்வில் இருந்து ரூ.4.1 லட்சம் கோடி கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் இழப்பின் தாக்கம் குறையும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

வர்த்தகத்தை எளிதாக்கும் முயற்சி: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து

ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பிரதமர் மோடியின் சுதந்திர தின அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டியை ஏற்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவு, இந்திய மக்களின் வாழ்க்கை மற்றும் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதற்கான அரசின் முயற்சியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வரலாற்று சாதனைக்கு பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மந்தமான பொருளாதாரமா? பீகார் தேர்தலா? டிரம்ப்பின் வரி விதிப்பா?: ப.சிதம்பரம் சரமாரி கேள்வி

ஜிஎஸ்டி வரியில் மாற்றத்தை கொண்டு வர ஒன்றிய அரசை தூண்டியது மந்தமான பொருளாதாரமா? பீகார் தேர்தலா? டிரம்ப்பின் வரி விதிப்பா? என பல கேள்விகளை எழுப்பி, தனது எக்ஸ் தள பதிவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிவிட்டிருப்பதாவது: ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருட்கள் மீதான வரி குறைப்பு வரவேற்கத்தக்கது. சீர்திருத்தம் செய்வதற்கு 8 ஆண்டுகள் என்பது மிகவும் தாமதமானது. தற்போதைய ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் இன்று வரை நடைமுறையில் உள்ள விகிதங்கள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கவே கூடாது.

கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் விகிதங்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாக குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் எங்கள் வேண்டுகோள்கள் உங்கள் காதுகளுக்கு கேட்கவே இல்லை. இப்போது ஜிஎஸ்டி வரியில் மாற்றத்தை கொண்டு வர ஒன்றிய அரசை தூண்டியது எது என்பதை யூகிப்பதில் ஆர்வமாக இருக்கிறது. மந்தமான பொருளாதார வளர்ச்சியா? வீட்டு கடன் அதிகரிப்பா? வீட்டு சேமிப்பு குறைவதா? பீகாரின் தேர்தலா? டிரம்பின் வரி விதிப்பா? அல்லது இவை அனைத்துமா? இவ்வாறு சரமாரியாக கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

Advertisement

Related News