தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாக்.கின் 6 விமானங்கள் வீழ்த்தப்பட்டன: இந்திய விமானப்படை தளபதி தகவல்

பெங்களூரு: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் 5 போர் விமானங்கள் உட்பட 6 விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி அமர் பிரீத் சிங் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. இதைத் தொடர்ந்து மே 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டது.

இந்த போரை மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இப்போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறினார். இந்திய விமானப்படையின் ரபேல் உட்பட 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியிருந்தது. இத்தகவல்களை இந்தியா மறுத்தது. இந்நிலையில், பெங்களூருவில் 16வது விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் எல்.எம் காத்ரேவின் நினைவு சொற்பொழிவு நேற்று நடந்தது. இதில், இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏ.பி.சிங் பங்கேற்று, பல்வேறு செயற்கைகோள் புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டு பேசியதாவது:

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானி்ன ஷபாஸ் ஜகோபபாத் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு எப்-16 விமானங்களின் பணியகம் அமைந்துள்ளது. அந்த பணியகத்தின் பாதி பகுதி சேதமடைந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த சில விமானங்களும் சேதமடைந்துள்ளன. முரித், சக்லாலா ஆகிய 2 கட்டுப்பாட்டு மையங்களும் தாக்கப்பட்டன. அங்கிருந்த சிறிய, பெரிய 6 ரேடார்கள் அழிக்கப்பட்டன. இதுதவிர, பாகிஸ்தான் விமானப்படையின் 5 போர் விமானங்களை நாங்கள் சுட்டு வீழ்த்தினோம்.

இஎல்ஐஎன்டி அல்லது ஏஇடபிள்யுசி வகையை சேர்ந்த பெரிய விமானம் ஒன்றையும் வீழ்த்தி உள்ளோம். இவை 300 கிமீ தூரத்தில் இருந்து தகர்க்கப்பட்டன. இதன் மூலம் தரையிலிருந்து வான் இலக்கை தகர்ப்பதில் பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. எங்கள் தாக்குதலின் சேதங்கள் செயற்கைகோள் புகைப்படங்கள் மூலம் உறுதிபடுத்தியும் உள்ளோம். எங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அற்புதமாக வேலை செய்தன.

குறிப்பாக, சமீபத்தில் வாங்கப்பட்ட எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு கேம் சேஞ்சராக செயல்பட்டது. அந்த அமைப்பின் மூலம் பாகிஸ்தான் பல்வேறு டிரோன்களையும், ஏவுகணைகளையும், போர் விமானங்களையும் இந்திய எல்லைக்குள் நுழைய விடாமல் தடுத்து வீழ்த்தினோம். எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பதால் அவர்களால் இந்தியாவில் ஊடுருவ முடியாததால் நமது ஆயுதங்களுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

80-90 மணி நேரம் நடந்த இப்போரை உயர் தொழில்நுட்ப போர் என்றே கூறுவேன். இதில் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தினோம். இனியும் போரை நீடித்தால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் சண்டை நிறுத்த பாகிஸ்தான் கெஞ்சியது. அதன் காரணமாகவே போர் நிறுத்தப்பட்டது. போர் நிறுத்தத்திற்கு யாருடைய நிர்பந்தமும் காரணமில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

* ஒன்றிய அரசு தலையிட்டதா?

போரில் அரசு விதித்த சில கட்டுப்பாடுகளால் ஆரம்பத்தில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அவற்றை விமானப்படை தலைமை தளபதி ஏ.பி.சிங் மறுத்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ‘‘ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது முப்படையினருக்கும் ஒன்றியஅரசு முழு சுதந்திரம் கொடுத்தது. அரசியல் அதிகாரம் கிடைத்ததால் தான் இந்த தாக்குதலில் இந்தியா வெற்றி பெற முடிந்தது.

எங்கள் மீது எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. எந்த அளவுக்கு பாகிஸ்தானை தாக்க வேண்டும் என நாங்கள் தான் முடிவு செய்தோம். நாங்களே அதனை முடிவு செய்து செயல்படுத்தி காட்டினோம். பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போரில் எங்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்தது. இதனால் தான் முதிர்ச்சியுடன் எங்களால் போர் செய்ய முடிந்தது’’ என்றார்.

* ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பிரதமர் மோடி நிறுத்தியது ஏன்?

மே 10 அன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பிரதமர் மோடி ஏன் நிறுத்தினார், இந்திய விமானப்படை பாகிஸ்தானின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய போதும் யாருடைய அழுத்தத்தால் இந்த போர் நிறுத்தம் வந்தது என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில்,’ விமானப்படைத் தளபதி அமர் பிரீத் சிங் வெளியிட்ட கருத்து அடிப்படையில் பார்க்கும் போது மே 10 ஆம் தேதி மாலை பிரதமர் திடீரென ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியது ஏன் என்பது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. பிரதமருக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தது, அவர் ஏன் இவ்வளவு சீக்கிரம் சரணடைந்தார்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

* ஆபரேஷன் சிந்தூர் மூலம் தன்னம்பிக்கை அதிகரிப்பு

புனேயில் நடைபெற்ற விழாவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவர் சமீர் காமத் பேசுகையில், ‘ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்குப் பிறகு, அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி இரட்டிப்பாகும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை  இந்தியாவின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பம் மூலம் அதன் எல்லைகளைப் பாதுகாக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்பது உலகிற்கு ஒரு அறிக்கையாகும்’ என்றார்.

* இந்திய படைகளால் ஒரு விமானம் கூட அழிக்கப்படவில்லை: பாக்.பாதுகாப்பு அமைச்சர்

இந்திய ஆயுதப் படைகளால் பாக்.ராணுவத்தின் எந்த விமானமும் தாக்கப்படவில்லை அல்லது அழிக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ ஒரு பாகிஸ்தான் விமானம் கூட இந்திய தரப்பால் தாக்கப்படவில்லை அல்லது அழிக்கப்படவில்லை. மூன்று மாதங்களாக, அத்தகைய கூற்றுக்கள் எதுவும் கூறப்படவில்லை.

அதே நேரத்தில் பாகிஸ்தான், உடனடியாக, சர்வதேச ஊடகங்களுக்கு விரிவான தகவல்களை கூறியது. அப்போது பாகிஸ்தான் விமானங்கள் அழிக்கப்பட்டதாக கூறாத இந்தியா, தற்போது பாக். விமானங்களை அழித்து விட்டதாக கூறுவது நம்பமுடியாதவை. சரியான நேரத்தில் தெரிவிக்கப்படாதவை. இந்திய ஆயுதப்படைகளுக்கான கட்டுப்பாட்டுக் கோட்டில் ஏற்பட்ட இழப்புகளும் விகிதாச்சாரத்தில் அதிகமாக இருந்தன.

உண்மை கேள்விக்குறியாக இருந்தால், இரு தரப்பினரும் தங்கள் விமானப் பட்டியல்களை சுயாதீன சரிபார்ப்புக்கு திறக்கட்டும். இருப்பினும் இது இந்தியா மறைக்க முயற்சிக்கும் யதார்த்தத்தை வெளிப்படுத்தும் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் ஒவ்வொரு மீறலும் விரைவான, உறுதியான மற்றும் உரிய பதிலடியை கொடுக்கும்’ என்றார்.