ஆபரேஷன் சிந்தூரில் தகர்க்கப்பட்ட தீவிரவாத முகாமை கட்டும் பாக். அரசு
இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்தது. தற்போது லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த காசிம் என்ற தீவிரவாதி, இந்தியாவால் தகர்க்கப்பட்ட முரிட்கே முகாமின் இடிபாடுகள் முன்பு நின்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்தியாவின் தாக்குதலில் எங்கள் முகாம் அழிக்கப்பட்டது உண்மைதான்.
Advertisement
ஆனால், முன்பைவிட பெரியதாக மசூதியை மீண்டும் கட்டி வருகிறோம். பாகிஸ்தான் இளைஞர்கள் இங்கு தீவிரவாதப் பயிற்சிக்கு சேர வேண்டும்’ என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். மற்றொரு காணொளியில் பேசிய அந்த அமைப்பின் துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி, முகாமை மீண்டும் கட்டுவதற்கு பாகிஸ்தான் அரசும், ராணுவமும் நிதி உதவி செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
Advertisement