தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆபரேஷன் சிந்தூர் விவகாரம்.. மூன்றாம் தரப்பு தலையீட்டை இந்தியா ஏற்கவில்லை: உண்மையை போட்டுடைத்த பாக். அமைச்சர்!!

இஸ்லாமாபாத்: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போரை தாம் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிவரும் நிலையில், மூன்றாம் தரப்பு தலையீட்டை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை என பாகிஸ்தான் துணை பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான இஷாக் தார் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. இதை எதிர்த்து, இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது மே 7ம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்'-ஐ நடத்தியது. இதையடுத்து, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த, இரு நாடுகளுக்கு இடையேயும் தாக்குதல்கள் மாறி மாறி நடந்துகொண்டிருந்தன. அதன்பின், இரு நாடுகளுக்கு இடையேயும் மே 10ம் தேதி போர் நிறுத்தம் எட்டப்பட்டது.

Advertisement

இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடப்பது குறித்தும், பாகிஸ்தான் துணைப் பிரதமர் முகமது இஷாக் தார் பேட்டியில் கூறியதாவது; இந்தியா - பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டுவர நடுநிலையான இடத்தில் பேச்சு நடத்த அமெரிக்கா ஒரு திட்டத்தை முன்மொழிந்ததாகவும், அதை ஏற்க இந்தியா திட்டவட்டமாக மறுத்து விட்டதாகவும் அவர் கூறினார். மேலும், இந்தியாவுடனான மத்தியஸ்தம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோவிடம் பாகிஸ்தான் கேட்டுக்கொண்ட போதும் இந்தியா அதனை நிராகரித்ததாகவும்,

இது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான இருதரப்பு விவகாரம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் இந்தியாவுடன் பயங்கரவாதம், வர்த்தகம், பொருளாதாரம், ஜம்மு காஷ்மீர் என அனைத்து விவகாரங்களிலும் பேச்சுவார்த்தை தான் முன்னோக்கி செல்வதற்கான வழி என்று தாங்கள் நம்புவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்தது தாம் தான் என டிரம்ப் மீண்டும், மீண்டும் கூறி வரும் நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News