ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் 9 போர் விமானங்கள் தகர்ப்பு: வெளியான புதிய தகவல்
பாகிஸ்தானுக்கு சொந்தமான சி-130 ஹெர்குலஸ் விமானம் இந்தியாவால் ஏவப்பட்ட டிரோன் மூலம் தகர்க்கப்பட்டது. மேலும் பாக்.கின் முக்கியமான வான்வழி கண்காணிப்பு தளம் அழிக்கப்பட்டது.
பெஷாவர், ஜாங், ஹைதராபாத் (சிந்து), குஜராத் (பஞ்சாப்), பஹாவல்நகர், அட்டாக் மற்றும் சோர் ஆகிய இடங்களில் உள்ள பாக். ராணுவ கட்டமைப்புகள் குறிவைத்து தகர்க்கப்பட்டன. மேலும் பாகிஸ்தான் விமானத் தளங்களாக நூர் கான், ரபிகி, முரித், சுக்கூர், சியால்கோட், பஸ்ரூர், சு போலாரி மற்றும் ஜகோபாபாத் ஆகியவற்றையும் இந்தியா தகர்த்தது.