சென்னை ஓபன் டென்னிஸ் மாயா ராஜேஷ்வரன் ஸ்ரீவள்ளியிடம் சரண்: வெகிக்கிடம் வைஷ்ணவி தோல்வி
சென்னை: சென்னையில் சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. கடந்த 2 நாட்களாக மழை பெய்ததால் போட்டிகள நடக்கவில்லை. இந்நிலையில், நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை மாயா ராஜேஷ்வரன் (16), தெலுங்கானாவை சேர்ந்த சக இந்திய வீராங்கனை ஸ்ரீவள்ளி ராஷ்மிகா பாமிடிபதி (23) உடன் மோதினார்.
துவக்கம் முதல் சிறப்பாக ஆடிய ஸ்ரீவள்ளி, எவ்வித சிரமமுமின்றி 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் வைல்ட் கார்ட் சிறப்பு நுழைவு மூலம் ஆடிய இந்திய வீராங்கனை வைஷ்ணவி அத்கர் (20), குரோஷியாவை சேர்ந்த டோனா வெகிக் (29) உடன் மோதினார். துடிப்புடன் ஆடிய வெகிக், அதிரடியாக புள்ளிகளை எடுத்தார். அதனால், 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.