சீன ஓபன் பேட்மின்டன் காலிறுதியில் உன்னதி சாத்விக், சிராக் ஜோடி: பி.வி.சிந்து, பிரணாய் வெளியேற்றம்
பரபரப்பான ஆட்டத்தில் நிதானமாகவும், நேர்த்தியாகவும் விளையாடிய இந்திய ஜோடி 21-19 21-19 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. ஆண் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், உலகின் 6ம் நிலை வீரரான சீனவின் தைபேயின் சௌ தியென் சென்னிடம் மோதினார். 65 நிமிடங்கள் நடந்த போட்டியில் 21-18 15-21 8-21 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று போட்டியில் இந்தியா வீராங்கனைகள் பி.வி.சிந்து, உன்னதி ஹோடா மோதினார். முதல் செட்டை 21-16 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி சிந்துவுக்கு உன்னதி அதிர்ச்சி தந்தார். 2வது செட்டிலும் இருவரும் மாறி மாறி புள்ளிகள் குவிக்க இழப்பறி நீடித்தது. ஒரு கட்டத்தில் 18-18 என்ற புள்ளிக் கணக்கில் சமநிலையில் இருந்தனர். இறுதியில் 21-19 என்ற புள்ளிக்கணக்கில் சிந்து வசப்படுத்தினார். வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை 21-13 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி உன்னதி வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.