ஊட்டி கோர்ட்டில் மாவோயிஸ்ட் ஆஜர்: 2 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி
ஊட்டி: கேரள எல்லையை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தின் அப்பர்பவானி அருகே நாடுகாணி அடர்ந்த வனப்பகுதியில் கண்காணிப்பு பணிக்காக கடந்த 2017ல் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டும், சில கேமராக்கள் காணாமலும் போயிருந்தது. இதுதொடர்பாக மஞ்சூர் போலீசார் வழக்குபதிந்து மாவோயிஸ்ட் மணிவாசகம் 2019ல் கேரளாவிலும், கடந்த ஆண்டு விக்ரம் கௌடா கர்நாடகாவிலும் சுட்டு கொல்லப்பட்டனர். சந்தோஷ் மற்றும் சோமன் ஆகியோர் கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே கேமராக்கள் மாயமான வழக்கு விசாரணை, ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மாவோயிஸ்ட் சோமனை போலீசார் பலத்த பாதுகாப்போடு ஆஜர்படுத்தினர். அவரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீாசர் அனுமதி கேட்டனர். ஆனால் 2 நாள் காவலில் எடுத்து விசாரித்து 19ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி லிங்கம் உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து சோமனை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.