ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
நீலகிரி : கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களில், பஸ்களை தலைகுந்தா பகுதியில் நிறுத்த உத்தரவிடப்பட்டது. சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வேறு வாகனங்களில் ஊட்டி நகருக்குள் செல்லவும், சோதனை சாவடிகளில் இந்த தகவலை தெரிவித்து அனுமதியளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஊட்டி நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறைந்தாலும், சுற்றுலா பயணிகள் மன உளைச்சலுடன் வந்து செல்லும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement