தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தது

Advertisement

ஊட்டி : ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசலில் இருந்து உள்ளூர் மக்கள் விடுபட்டுள்ளனர். சமவெளிப் பகுதிகளில் இம்முறை கடும் வெயில் நிலவியது.கடந்த ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.இதனால், லாட்ஜ், காட்டேஜ்கள், ஓட்டல்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகள் கூட்டதால் நிரம்பி வழிந்தன.

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை அதிகளவில் காணப்பட்டது. அதே போல் ஊட்டி நகர் மட்டுமின்றி, ஊட்டி - கோவை சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் பள்ளிகள் 10ம் தேதி திறக்கப்படும் நிலையில், தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று முதல் கூட்டம் குறைந்துள்ளது.

இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக சுற்றுலா பயணிகள் வாகனங்களால் பிசியாக இருந்த ஊட்டி சாலைகளில் நேற்று வாகன நெரிசல் சற்று குறைந்து காணப்பட்டது.அதேபோல், பெரும்பாலான லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.சீசன் முடிந்து மூன்று நாட்களே ஆகும் நிலையில், ஓட்டல் மற்றும் காட்டேஜ்களில் அறைகளின் கட்டணங்களை உரிமையாளர்கள் குறைத்து விட்டனர்.

ஊட்டி நகரில் சுற்றுலா பயணிகள் குறைந்துள்ளதால் உள்ளூர் மக்கள் அனைத்து இடங்களுக்கும் வாகன நெரிசலில் சிக்கி தவிக்காமலும், சுற்றிக் கொண்டு செல்லாமல் நேரடியாக சென்று வர முடிவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த நிலையில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா,படகு இல்லம் போன்ற பகுதிகளில் வழக்கத்தை காட்டிலும் குறைந்த அளவே சுற்றுலா பயணிகளை காண முடிந்தது.

Advertisement