ஊட்டி தாவரவியல் பூங்காவில் 500 தொட்டிகளில் சைக்ளோன் மலர்கள் உற்பத்தி: 2வது சீசனுக்கான பணி தீவிரம்
Advertisement
பூங்காவில் உள்ள நர்சரிகளில் விதைப்பு பணிகள் மற்றும் நாற்று உற்பத்தி பணிகள் நடந்து வருகிறது. இதனால், பூங்காவில் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது. அதேசமயம், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையாமல் இருக்க கண்ணாடி மாளிகையில் பல ஆயிரம் தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனை சுற்றலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
தற்போது கண்ணாடி மாளிகையில் வைப்பதற்காகவும், இரண்டாம் சீசனின் போது அலங்காரங்கள் செய்வதற்காகவும் பூங்காவில் உள்ள நர்சரியில் 500 தொட்டிகளில் சைக்ளோன் மலர்கள் உற்பத்தி செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த தொட்டிகளில் மலர்கள் பூத்தவுடன் இவைகள் கண்ணாடி மாளிகையிலும் மற்றும் பூங்காவின் பிறப்பகுதிகளிலும் வைக்கப்பட உள்ளன. சில தொட்டிகளில் மலர்கள் பூக்கள் பூக்க துவங்கியுள்ளன.
Advertisement