ஆன்லைன் காதலுக்காக 750 கிமீ பயணம்; மாடல் அழகியின் கணவரை பார்த்து காதலன் அதிர்ச்சி: ரூ.30 லட்சத்தை இழந்த பரிதாபம்
அவர்தான் தனது வருங்கால மனைவி என்று முழுமையாக நம்பிய மைக்கேல், அந்தப் போலி கணக்கிற்கு சுமார் 35,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 30 லட்சம்) அனுப்பியுள்ளார். தனது காதலியை நேரில் சந்தித்து, தனது காதலை வெளிப்படுத்த எண்ணி, பெல்ஜியத்திலிருந்து பிரான்சிற்கு சுமார் 472 மைல் (750 கி.மீ) தூரம் காரில் பயணம் செய்து, சோஃபியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு வீட்டுக் கதவைத் திறந்தது சோஃபி அல்ல; அவரது நிஜக் கணவரான ஃபேபியன் பவுட்டமைன். அதிர்ச்சியடைந்த மைக்கேல், ‘நான் சோஃபியின் வருங்கால கணவர்’ என்று கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பேபியன், இந்த வினோதமான சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்தார்.
பின்னர், மாடல் அழகி சோஃபி, இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ‘இந்த மனிதருக்காக வருந்துகிறேன். போலிக் கணக்குகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்’ என்று பதிவிட்டார். கடைசியில், உண்மையை உணர்ந்துகொண்ட மைக்கேல் ஏமாற்றத்துடன் தனது நாட்டிற்கு திரும்பினார். நிஜக் கணவர் குறுக்கிட்டதால், ஆன்லைன் காதல் மோசடி அம்பலமான இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.