ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
டெல்லி: பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை செய்யும் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அங்கீகாரமற்ற சூதாட்டங்களுக்கு ஏற்கனவே அபராதம் மற்றும் 7 ஆண்டு சிறை தண்டனை உள்ளது. தடையை மீறி பணம் வைத்து ஆன்லைன் விளையாட்டு விளையாடினால் ஒரு கோடி ரூபாய் அபராதம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
Advertisement
Advertisement