ஆன்லைன் முதுநிலை பட்டய படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்
சென்னை: கால்நடை அறிவியல் பட்டதாரிகளுக்கான 22 ஆன்லைன் முதுநிலை பட்டய படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய பிராணிகள், நுண்ஒலிப் பரிசோதனை, சிறிய கால்நடைகளுக்கான தோல் மருத்துவம், கறவை மாடுகளில் மலட்டுத் தன்மையும் அதன் மேலாண்மையும், மரபுசார் கால்நடை மருத்துவம் போன்ற முதுநிலை பட்டய படிப்புகள் கால்நடை பட்டதாரிகளுக்கும்,விலங்கு நலன், உயிர் தகவலியல், கால்நடைத் தீவன உற்பத்தித் தொழில்நுட்பம், வணிக முறையில் கோழி வளர்ப்பும் பராமரிப்பும் போன்ற முதுநிலை டிப்ளமோ படிப்புகள் கால்நடை மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு வழங்கப்படுகின்றன. தகுதியானவர்கள் தங்கள் விண்ணப்பங்களை www.tanuvasdde.in என்ற இணைய தளத்தில் வருகிற அக்டோபர் 3ம் தேதிவரை சமர்ப்பிக்கலாம்.
Advertisement
Advertisement