ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல்
டெல்லி: பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை செய்யும் மசோதாவை மக்களவையில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். சூதாட்டம் உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க புதிய மசோதா வழிவகை செய்யும். அங்கீகாரமற்ற சூதாட்டங்களுக்கு ஏற்கனவே அபராதம் மற்றும் 7 ஆண்டு சிறை தண்டனை உள்ளது. தடையை மீறி பணம் வைத்து ஆன்லைன் விளையாட்டு விளையாடினால் ஒரு கோடி ரூபாய் அபராதம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
Advertisement
Advertisement