ஆன்லைன் மூலம் பதிவு செய்து அரசு பேருந்தில் பயணித்த 13 பேருக்கு பரிசு தொகை: போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
Advertisement
இத்திட்டத்தில் ஜூன் 2024 முதல் 13 பயணிகளை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, முதல் 3 பயணிகளுக்கு ₹10 ஆயிரமும், இதர 10 பயணிகளுக்கு ₹2 ஆயிரமும் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி செப்டம்பர்-2024 மாதத்திற்கான 13 பயணிகளை கணினி குலுக்கல் முறையில் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேர்வு செய்துள்ளார். இவர்களுக்கு விரைவில் பரிசுகள் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement