ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு திமுகதான்: 75வது அறிவு திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு திமுகதான் என 75வது அறிவு திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் மூலம் திமுகவை வீழ்த்த முயற்சி
கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால் தேர்தல் ஆணையம் மூலம் வீழ்த்த நினைக்கின்றனர். தேர்தல் ஆணையம் மூலம் குறுக்கு வழியில், திருட்டுத்தனமாக வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்து பார்க்கின்றனர்.
அறிவொளியை பரப்புவதே திமுகவின் கடமை
அறிவை மையப்படுத்தி அறிவொளியை பரப்புவதே திமுகவின் தலையாய கடமை.
எஸ்.ஐ.ஆர் மூலம் திமுகவை வீழ்த்த நினைக்கின்றனர்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஏன் அவசரம் அவசரமாக நடத்த வேண்டும். தேர்தல் நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எஸ்.ஐ.ஆர்.-ஐ நடத்துகின்றனர். அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்தபோதிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஏன் நடத்துகின்றனர்.
திமுகவின் உழைப்பு சாதாரண உழைப்பு அல்ல
திமுகவின் சார்பில் பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் அவசரம் அவசரமாக எஸ்.ஐ.ஆரை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. களத்தில் வேலை செய்யும் திமுகவினர் போலி வாக்காளர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.யாருடைய வாக்குரிமையும் பறிபோகாமல் திமுகவினர் களத்தில் பணியாற்ற வேண்டும்.
திமுகவின் வரலாறு தெரியாமல் மிரட்டி பார்க்கின்றனர்
திமுகவின் உழைப்பு சாதாரண உழைப்பல்ல; வரலாறு தெரியாமல் சிலர் திமுகவை மிரட்டி வருகின்றனர். கட்சி தொடங்கி 18 ஆண்டுகள் சுற்றி சுழன்று களப்பணியாற்றி ஆட்சியை பிடித்தனர்.
ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு திமுகதான்
ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு திமுகதான்; திமுக போல் உழைக்கும் அறிவும் தேவை என்று முதலமைச்சர் பேசியுள்ளார்.
திமுகவை அழிக்க நினைப்போர் எண்ணம் ஈடேறாது
திமுகவை அழிக்க வேண்டும் என்று நினைப்போரின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.
திமுக போல வெற்றி பெறலாம் என பகல் கனவு
திமுகவை போல வெற்றி பெறலாம் என சில அறிவிலிகள் பகல் கனவு காண்கின்றனர். அடுத்த முதலமைச்சர் நான்தான் என்று அறிவித்து கட்சியை ஆரம்பிக்கவில்லை.
கட்சி தொடங்கி 18 ஆண்டுகள் சுற்றி சுழன்று களப்பணியாற்றி ஆட்சியை பிடித்தனர்.
திமுகவின் வளர்ச்சி பலரின் கண்களை உறுத்துகின்றன
திமுகவின் சாதனைகள், வளர்ச்சிகள் பலரின் கண்களை
உறுத்துகின்றன.
திமுக கூட்டம் கூடி கலையும் கூட்டம் அல்ல
எத்தனை பெரிய கூட்டங்கள் வந்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது.
காவியால் நம்மை ஒன்றும் செய்ய இயலாது
கருப்பு, சிவப்பு, நீலம் சேர்ந்திருக்கும் நம்மை எந்த காவியாலும் வீழ்த்த முடியாது.
2026 தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும்
2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக மாபெரும் வெற்றி பெறும். என தெரிவித்தார்.