ஓணம் பண்டிகையை அத்தப்பூ கோலமிட்டு வரவேற்பு
பந்தலூர் : பந்தலூரில் ஓணம் பண்டிகையை அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடினர்.நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதி கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏராளமான மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
Advertisement
இந்நிலையில் நேற்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. வீட்டின் முன்பாக பெண்கள் கேரளா பாரம்பரிய உடைகளை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். ஒருவருக்கு ஒருவர் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
Advertisement