ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை - கேரளா இடையேயான விமான டிக்கெட் கட்டணங்கள் பன்மடங்கு உயர்வு!!
திருவனந்தபுரம் : ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை - கேரளா இடையேயான விமான டிக்கெட் கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளது. கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் கேரள மக்கள், சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சென்னை, உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய இடங்களுக்கு செல்லும் செல்லும் விமானங்களிள் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
சென்னை - திருவனந்தபுரம் இடையேயான விமான கட்டணம் சாதாரண நாட்களின் ரூ.4,359 என்று இருந்த நிலையில், இன்றைய கட்டணம் ரூ.19,903 ஆக அதிகரித்துள்ளது. இதே போல், சென்னை - கொச்சி விமான கட்டணம் ரூ.3,713ல் இருந்து ரூ.11,798 ஆகவும் சென்னை - கோழிக்கோடு சாதாரண நாள் விமான கட்டணம் ரூ.3,629ல் இருந்து ரூ.10, 286 ஆகவும் சென்னை - கண்ணூர் விமான கட்டணம் ரூ.3,655ல் இருந்து ரூ.9,923 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் விமானத்தில் செல்லும் பயணிகளின் கூட்டம் குறையவில்லை.