தெருக்களில் ஜாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை வெளியிட்டதற்கு முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தோம்: திருமாவளவன் பேட்டி
சென்னை: தெருக்களில் ஜாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை வெளியிட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தோம் என வி.சி.க.தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில், இன்னும் சில ஜாதிப் பெயர்களில் உள்ள 'ன்' விகுதியை மாற்றி 'ர்' விகுதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தோம். நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும். வடசென்னை பகுதி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்துவருவதாக முதலமைச்சர் தெரிவித்தார் என அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement