ஆம்னி பஸ்சில் ரூ.20.81 லட்சம் ஹவாலா பணம்: சென்னை வாலிபர் கைது
புதுக்கோட்டை: சென்னையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் நேற்று அதிகாலை புதுக்கோட்டை கருவேப்பிலான் ரயில்வே கேட் பகுதியில் வந்தபோது புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஏடிஎஸ்பி சுப்பையா தலைமையிலான போலீசார் அந்த பஸ்சை நிறுத்தி அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
Advertisement
அப்போது ஒரு பயணியின் பேக்கில், 5 பண்டல்களில் ரூ.20 லட்சத்து 81 ஆயிரத்து 150 ஹவாலா பணம் இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தியதில், சென்னை தண்டையார்பேட்டை சஞ்சய் காந்திநகர் 6ம்வீதியை சேர்ந்த அமீர் (48) என்பதும், பேக்கில் இருந்தது கணக்கில் வராத ஹவாலா பணம் என்பதும், கமிஷனுக்காக சென்னையில் இருந்து தொண்டிக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து அமீரை கைது செய்தனர்.
Advertisement