ஆம்னி பஸ் டிரைவரை தொடர்ந்து கிளீனரை கட்டி வைத்து தாக்குதல்: வீடியோ வைரல்
Advertisement
இதுகுறித்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து டிரைவர் பாலகருப்பையா புகாரின்படி, மதுரை மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிந்து, டிராவல்ஸ் உரிமையாளர் ராஜசேகர் மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், கிளீனரை கட்டி வைத்து தாக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. ஆம்னி பஸ் கிளீனரிடம் விசாரித்து தாக்கும் வீடியோக்களில் உரிமையாளர் ராஜசேகர் கேள்வி கேட்பதும், கை கட்டப்பட்ட நிலையில் அவரை கன்னத்தில் அறைந்தும், தலைமுடியை பிடித்து இழுத்து சரமாரியாக அடிப்பதும் என காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Advertisement