ஆம்னி பேருந்தில் 3 கிலோ தங்க நகை கொள்ளை: 48 மணி நேரத்தில் கைது
சேலம்: சேலம் சங்ககிரியில் ஆம்னி பேருந்தில் 3 கிலோ நகைகளை திருடிய வழக்கில் 48 மணி நேரத்தில் போலீசார் இருவரை கைது செய்தனர். மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில் குமாரை சந்தித்து தங்க நகை உற்பத்தியாளர் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர். இருவரைம் கைது செய்த போலீசார் ரூ.4 கோடி மதிப்புள்ள 3 கிலோ 150 கிராம் நகைகளை மீட்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு நகைக்கடையில் பணிபுரிந்த பாலசுப்பிரமணியன் கொள்ளையை அரங்கேற்றியுள்ளார்.
Advertisement
Advertisement