வெள்ள பாதிப்பை தடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
சென்னை: கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நினைவில் கொண்டு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். பருவமழையை எதிர்கொள்ள அரசு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். கடந்த காலங்களில் வெள்ளப் பாதிப்பு பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து மக்களை முன்கூட்டியே பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement