ஒடிசாவில் 21 நாடாளுமன்ற தொகுதிகளில் எந்திரத்தில் பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக புகார்
புவனேஷ்வர்: ஒடிசாவில் 21 நாடாளுமன்ற தொகுதிகளில் எந்திரத்தில் பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக பிஜு ஜனதா தளம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. 'ஒடிசாவில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு 50% சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது எனவும் பல தொகுதிகளில் தேர்தல் முடிந்த பிறகு 30 சதவீதம் வரை கூடுதல் வாக்குகள் பதிவாகி உள்ளது.தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக ஆணையத்தில் பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. தேர்தல் முறைகேடு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்' என பிஜு ஜனதா தளம் எச்சரிக்கை விடுத்துள்ளது.