ஓடிஐ பவுலிங் முதலிடத்தில் தீக்சனா
ஐசிசி ஒருநாள் போட்டிகளில் பந்து வீச்சு தரவரிசையில் இலங்கை வீரர் மஹீஸ் தீக்சனா 671 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய வீரர் குல்தீப் யாதவ் 650 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் தென் ஆப்ரிக்கா வீரர் கேஷவ் மகராஜ் 3ம் இடத்திலும் மாற்றமின்றி தொடர்கின்றனர்.
இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 9ம் இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் குடகோஷ் மோத்தி, 5 நிலைகள் உயர்ந்து 12ம் இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர்கள் முகம்மது ஷமி, முகம்மது சிராஜ் தலா ஒரு நிலை தாழ்ந்து, முறையே, 14, 15வது இடங்களுக்கு சரிந்துள்ளனர்.