அக்டோபர் 16 முதல் 18க்குள் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னை: அக்டோபர் 16 முதல் 18-க்குள் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; தென்மாவட்டங்களில் குறைந்த அளவே மழை பெய்ய வாய்ப்புள்ளது. இயல்பைவிட வடமாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் 44 செ.மீ. மழை பதிவாவது வழக்கம். நடப்பாண்டில் 50 செ.மீ. வரை வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement