அக். 5ல் கொழும்பு நகரில் இந்தியா-பாக். கிரிக்கெட் யுத்தம்: மகளிர் உலக கோப்பை பட்டியல் வெளியீடு
இத்தொடரில் பாகிஸ்தான் ஆடும் போட்டிகள் உள்பட சில போட்டிகள் கொழும்பு நகரில் நடைபெற உள்ளன. ரவுண்ட் ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை ஆடும். அரை இறுதிப் போட்டிகள், அக். 29, 30ம் தேதிகளிலும், இறுதிப் போட்டி, நவ. 2ம் தேதியும் நடைபெற உள்ளன. ரவுண்ட் ராபின் முறையில் நடக்கும் போட்டிகளின் இறுதியில், மேலே உள்ள 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். பட்டியலில் முதலில் உள்ள அணி 4வது அணியுடனும், 2வது இடம்பெறும் அணி 3வது அணியுடனும் அரையிறுதியில் மோதும்.
மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை முழு பட்டியல்
கிழமை தேதி போட்டி இடம் நேரம்-மணி
செவ்வாய் செப்.30 இந்தியா-இலங்கை பெங்களூரு பிற்பகல் 3.00
புதன் அக். 1 ஆஸி - நியுசி இந்துார் பிற்பகல் 3.00
வியாழன் அக். 2 வ.தேசம் - பாக். கொழும்பு பிற்பகல் 3.00
வெள்ளி அக். 3 இங்கி - தெ. ஆ. பெங்களூரு பிற்பகல் 3.00
சனி அக். 4 ஆஸி - இலங்கை கொழும்பு பிற்பகல் 3.00
ஞாயிறு அக். 5 இந்தியா - பாக். கொழும்பு பிற்பகல் 3.00
திங்கள் அக். 6 நியுசி - தெ. ஆ. இந்துார் பிற்பகல் 3.00
செவ்வாய் அக். 7 இங்கி - வ.தேசம் கவுகாத்தி பிற்பகல் 3.00
புதன் அக். 8 ஆஸி - பாக். கொழும்பு பிற்பகல் 3.00
வியாழன் அக். 9 இந்தியா - தெ.ஆ. விசாகப்பட்டினம் பிற்பகல் 3.00
வெள்ளி அக். 10 நியுசி - வ.தேசம் விசாகப்பட்டினம் பிற்பகல் 3.00
சனி அக். 11 இங்கி - இலங்கை கவுகாத்தி பிற்பகல் 3.00
ஞாயிறு அக். 12 இந்தியா - ஆஸி விசாகப்பட்டினம் பிற்பகல் 3.00
திங்கள் அக். 13 தெ.ஆ. - வ.தேசம் விசாகப்பட்டினம் பிற்பகல் 3.00
செவ்வாய் அக். 14 நியுசி - இலங்கை கொழும்பு பிற்பகல் 3.00
புதன் அக். 15 இங்கி - பாக். கொழும்பு பிற்பகல் 3.00
வியாழன் அக். 16 ஆஸி - வ.தேசம் விசாகப்பட்டனம் பிற்பகல் 3.00
வெள்ளி அக். 17 தெ.ஆ.-இலங்கை கொழும்பு பிற்பகல் 3.00
சனி அக். 18 நியுசி - பாக். கொழும்பு பிற்பகல் 3.00
ஞாயிறு அக். 19 இந்தியா - இங்கி இந்துார் பிற்பகல் 3.00
திங்கள் அக். 20 இலங்கை-வ.தேசம் கொழும்பு பிற்பகல் 3.00
செவ்வாய் அக். 21 தெ.ஆ.- பாக். கொழும்பு பிற்பகல் 3.00
புதன் அக். 22 ஆஸி - இங்கி இந்துார் பிற்பகல் 3.00
வியாழன் அக். 23 இந்தியா - நியுசி கவுகாத்தி பிற்பகல் 3.00
வெள்ளி அக். 24 பாக். - இலங்கை கொழும்பு பிற்பகல் 3.00
சனி அக்.25 ஆஸி - இலங்கை இந்துார் பிற்பகல் 3.00
ஞாயிறு அக். 26 இங்கி - நியுசி கவுகாத்தி முற்பகல் 11.00
ஞாயிறு அக். 26 இந்தியா - வ.தேசம் பெங்களூரு பிற்பகல் 3.00