ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மூன்றாம் கட்டம்' செயல்படுத்த அரசாணை வெளியீடு..!
சென்னை: ரூ.8428.50 கோடி மதிப்பில் ஓசூர் மாநகராட்சி, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 20 ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு, குடிநீர் வழங்கிட ‘ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மூன்றாம் கட்டம்' செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 38.81 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement