சத்துணவு, அங்கன்வாடிகளுக்கு ஓராண்டுக்கான 113 கோடி முட்டைகளை கொள்முதல் செய்ய டெண்டர்
Advertisement
சென்னை: சத்துணவு, அங்கன்வாடிகளுக்கு ஓராண்டுக்கான 113 கோடி முட்டைகளை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மதிய நேரத்தில் உணவுடன் முட்டை வழங்கப்படுகிறது. அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் மதிய உணவுடன் முட்டை வழங்கப்படுகிறது. 113 கோடி முட்டைகளை கொள்முதல் செய்ய சமூக நலத்துறை டெண்டர் கோரியுள்ளது. பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் 38,77,438 மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனர். அங்கன்வாடி மையங்களில் 18,00,274 குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.
Advertisement