சென்னை நுங்கம்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்திய 7 பேர் கைது..!!
அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் கொடுத்த தகவலின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதிமுக ஐ.டி விங்ஸ் முன்னாள் மாநில நிர்வாகி பிரசாத் கடந்த மாதம் 22ம் தேதி நுங்கம்பாக்கம் பாரில் நடந்த மோதல் தொடர்பாக கைது செய்யப்பட்டார். தொடர்ச்சியாக அவர் மீது மோசடி வழக்குகள் உள்ளிட்ட 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டு தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளார். அவரை 4 முறை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் தற்போது 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது நெல்லையை சேர்ந்த சூரிய பாரதி சாலி கிராமம் கண்ணன், ராம் குமார், விருகம் பாக்கம் பிரதீப், கோடம்பாக்கம் சரவணகுமார்,கவுதம் ராஜ்,