38 வயதில் நம்பர் 1 ரோகித் சாதனை
லண்டன்: ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். 38 வயது 182 நாட்கள் ஆன ரோகித், அதிக வயதில் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, விராட் கோஹ்லி, சுப்மன் கில் ஆகியோர் ஏற்கனவே உள்ளனர்.
Advertisement
ஆஸியுடன் சமீபத்தில் நடந்த ஒரு நாள் போட்டிகளில் அபாரமாக ஆடியதன் எதிரொலியாக, ரோகித், 781 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். 2ம் இடத்தில் ஆப்கன் வீரர் இப்ராகிம் ஸட்ரான் உள்ளார். முதலிடத்தில் இருந்த இந்திய கேப்டன் சுப்மன் கில் 2 நிலைகள் தாழ்ந்து 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
Advertisement