ஜோசப் பள்ளி என்எஸ்எஸ் மாணவர்கள் சார்பில் கூட்டப்புளி பாமணி குளத்துக்கரையில் 3 ஆயிரம் பனை விதைகள் நடும்விழா
நெல்லை : கூட்டப்புளி புனித ஜோசப் பள்ளி என்எஸ்எஸ் முகாமில் பங்கேற்ற மாணவர்கள் பாமணி குளத்துக்கரையில் 3 ஆயிரம் பனை விதைகளை நட்டினர்.
நெல்லை மாவட்டம் கூட்டப்புளியில் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி சார்பில் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் ஆரோக்கியதாஸ், இணை அலுவலர் ஆரோக்கிய சோரப் ஆகியோர் தலைமை வகித்தனர். முகாமை தலைமை ஆசிரியர் ஜான் ரூபின் குமார் சிறப்புரை ஆற்றி துவக்கிவைத்தார்.
இதையொட்டி ஆசிரியர்களும், என்எஸ்எஸ் மாணவர்களும் இணைந்து பூவரசு மரக்கன்றுகள் நட்டினர். மேலும் சங்கனாபுரம் கால்நடை மருத்துவமனை வளாகத்தை தூய்மை செய்தல், குடிநீர் இணைப்பிற்கான குழி தோண்டும் பணி மற்றும் பனை விதைகள் சேகரிப்பு உள்ளிட்ட போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர்.
அத்துடன் பெரியகுளம் அரசு துவக்கப்பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மை செய்யும் பணி மற்றும் ஜெயமாதபுரம் அரசு தொடக்கப் பள்ளி, கோயில் வளாகத்தில் தூய்மை இயக்க திட்டப்பணிகளில் ஈடுபட்டனர். ஜெயமாதபுரத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி, டிஜிட்டல் இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது.
இதைத்தொடர்ந்து பாமணி குளத்துக்கரையில் சுற்றுச்சூழலை காப்போம் பசுமையை உருவாக்குவோம் என்ற நோக்கில் 3 ஆயிரம் பனை விதைகள் என்.எஸ்.எஸ் மாணவர்களால் நட்டனர். ஜெயமாதபுரத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
இதில் பசுமையை உருவாக்கும் என்ற தலைப்பில் என்.எஸ்.எஸ் மாணவர்கள், ஆசிரியர்கள் சிறப்புரை ஆற்றினர். சங்கனாபுரத்தில் தூய்மையை சேவை என்ற நோக்கில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வளாகத்தை தூய்மை செய்து மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. இதில் தூய்மையே சேவை என்பது குறித்து டாக்டர் கார்த்திக் பேசினார்.