நவம்பர் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை மக்கள் தொகை மாதிரி கணக்கெடுப்பு தொடக்கம்!
டெல்லி: நவம்பர் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை மக்கள் தொகை மாதிரி கணக்கெடுப்பு தொடங்குகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் அடுத்த மாதம் மாதிரி கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. பொதுமக்களே தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளும் வசதி இம்முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. வீடுகளை கணக்கெடுக்கும் பணி 2026 ஏப். 1ம் தேதியும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பிப். 1ம் தேதியும் நடக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது.
Advertisement
Advertisement