தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

8 போட்டிகளில் வென்று முதலிடம்; உலக கோப்பை கால்பந்து தகுதி பெற்றது நார்வே: 1998க்கு பின் சாதனை படைத்தது

 

Advertisement

வெனிஸ்: இத்தாலியின் வெனிஸ் நகரில் நேற்று நடந்த தகுதிச் சுற்று கால்பந்து போட்டியில் இத்தாலி அணியை 4-1 என்ற கோல் கணக்கில் அசத்தலாக வீழ்த்திய நார்வே அணி, 2026 ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் பங்கேற்பதற்கு தகுதி பெற்றுள்ளது. வரும் 2026 ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை, அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியை நடத்தும் இந்த 3 நாடுகளும் உலகக் கோப்பை போட்டிகளில் ஆட நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மற்ற அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இத்தாலியின் வெனிஸ் நகரில், ஐ பிரிவில் நேற்று நடந்த கடைசி தகுதிச் சுற்றுப் போட்டியில் இத்தாலி - நார்வே அணிகள் மோதின. போட்டி துவங்கி 11வது நிமிடத்தில் இத்தாலி வீரர் பியோ எஸ்போஸிடோ அபாரமாக கோல் அடித்து தமது அணியை முன்னிலைப்படுத்தினார்.

ஆனால், அதன் பின் பொறுப்பை உணர்ந்து ஆக்ரோஷமாக ஆடிய நார்வே வீரர்கள் போட்டியின் இறுதி வரை ஆதிக்கம் செலுத்தினர். போட்டியின் 63வது நிமிடத்தில் நார்வேயின் ஆன்டோனியோ நூஸா ஒரு கோல் போட்டார். அவரைத் தொடர்ந்து, 78 மற்றும் 79வது நிமிடங்களில் நார்வேயின் எர்லின் ஹாலண்ட் அடுத்தடுத்து 2 கோல்களை போட்டு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார். கடைசியாக, 90 3வது நிமிடத்தில் நார்வே வீரர் ஜார்கன் ஸ்ட்ராண்ட் லார்சன் அணியின் 4வது கோல் போட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன் மூலம் 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணியை வெற்றி வாகை சூடியது நார்வே. இதனால், ஐ பிரிவில் 24 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த அந்த அணி, 1998ம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் ஆட தகுதி பெற்று அசத்தியுள்ளது. தகுதிச் சுற்றுகளில் 9 போட்டிகளில் ஆடிய நார்வே, 8ல் வெற்றியும், ஒன்றில் டிராவும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement