வட இந்தியருக்கு தமிழகத்தில் ஓட்டு பாஜவுக்கு சாதகமே: சீமான் எதிர்ப்பு
மதுரை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மெதுவாக இந்தியை திணித்து இந்தி பேசும் மாநிலமாக அபகரித்து வருகிறார்கள். வட இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுத்துவிட்டால் அரசியலையும், அதிகாரத்தையும் அவன் தீர்மானித்து விடுவான். அது முழுக்க பாஜவுக்கு சாதகமான வாக்குகள் தான். வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் ஓட்டுரிமை வழங்கக்கூடாது. நான் இருக்கும் வரை அது நடக்காது. நடிகர் விஜய்க்கு எங்களைக் காட்டிலும் வெளிச்சம் உள்ளதாக சொல்கிறார்கள். அதில் தவறில்லை. விஜயகாந்த்துக்கு இல்லாத எழுச்சியா? அரசியலுக்கு வருவது பிரச்னை இல்லை. எந்த கட்சிக்கு மாற்றாக வருகிறார்கள்? எந்த கோட்பாட்டுக்கு எதிராக வருகிறார்கள் என்பது தான் கேள்வியே? இவ்வாறு கூறினார்.