வடமாநிலத்தவர்களை வாக்காளராக சேர்த்தது ஊழல்: தேர்தல் ஆணையம் மீது நயினார் குற்றச்சாட்டு
அவனியாபுரம்: .தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: வடமாநில நபர்கள் இங்கு வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளது தவறான செயல். இதுவும் ஒரு ஊழல். திருப்பூரில் ரோந்து சென்ற எஸ்ஐயை வெட்டி படுகொலை செய்துள்ளனர். போலீஸ்காரர்களுக்கே பாதுகாப்பு இல்லை. இவ்வாறு கூறினார். அப்போது நிருபர்கள், ஓபிஎஸ் குறுஞ்செய்தி தான் ஆதாரம் என்று கூறியது குறித்து கேட்டபோது, ‘‘அவரிடமே கேளுங்கள்’’ என்றார்.
பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை மேற்கொண்டதில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதில் 6.5 லட்சம் பீகாரிகள் தமிழக வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட உள்ளதாகவும், இந்த ஓட்டுகள் பாஜவுக்கு சாதகமாக மாற வாய்ப்புள்ளதாக காங்கிரஸ், நாதக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில், தேர்தல் ஆணையம் மீது பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனே, இது ஊழல் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.